நாட்டில் செயல்பட்டு வரும் 12 அரசுத் துறை வங்கிகளை, வெறும் 4 வங்கிகளாக சுருக்கும் முயற்சி குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்திட்டத்தை 2026–27 நிதியாண்டுக்குள் நடைமுறையில் கொண்டு வர அரசின் நோக்கம் என கூறப்படுகிறது.
வங்கிகளின் செயல்திறனை உயர்த்துதல், உலகளாவிய அளவில் போட்டியிடக்கூடிய மிகப்பெரிய வங்கிகளை உருவாக்குதல், மேலும் நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்குத் தேவையான மிகப் பெரிய அளவிலான கடன்களை வழங்கும் ஆற்றலை வலுப்படுத்துதல் ஆகியவற்றை முன்னிறுத்தி இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இணைப்பு செயல்முறைக்கு பின், எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, மற்றும் கனரா வங்கி–யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா இணைந்து உருவாகும் புதிய வங்கி என மொத்தத்தில் நான்கு பெரிய பொதுத்துறை வங்கிகளே செயல்படவுள்ளன.