காந்தாரா காட்சியைச் சுற்றிய சர்ச்சை: ரன்வீர் சிங் மன்னிப்பு தெரிவித்தார்
காந்தாரா திரைப்படத்தின் ஒரு காட்சியை நகலெடுத்து நடித்தது விவாதத்தை கிளப்பியதால், பாலிவுட் நட்சத்திரமான ரன்வீர் சிங் பொதுவாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழா (IFFI) நிறைவு நிகழ்ச்சியில் ரன்வீர் சிங் கலந்து கொண்டார்.
அங்கு, காந்தாரா படத்தில் வரும் ‘ஓ’ என்று ஒலி எழுப்பும் பிரபல காட்சியை நையாண்டி பாணியில், மோசமான முகபாவனையுடன் அவர் மிமிக்ரி செய்த வீடியோ இணையத்தில் பரவியது.
இந்த காட்சி வைரலானதும், “கன்னடர்கள் நம்பும் தெய்வங்களை அவமதித்துள்ளார்” என்று பலர் கண்டனம் தெரிவித்தனர்.
சர்ச்சை பெருகிய நிலையில், யாரின் மத உணர்வையும் காயப்படுத்தும் நோக்கம் தன்னிடம் இல்லை என விளக்கி, ரன்வீர் சிங் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்ட அறிக்கையை வெளியிட்டார்.