புகையிலை, பான் மசாலாவுக்கு புதிய வரி முன்னேற்பாடு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்களுக்கு புதிய வரி விதிக்கும் இரண்டு மசோதாக்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
புகையிலை, பான் மசாலா, சிகரெட், மெல்லும் புகையிலை, ஹூக்கா உள்ளிட்ட பொருட்களுக்குக் கூடுதல் கலால் வரி விதிப்பதற்கான இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மசோதா நிறைவேற்றப்பட்டால், இப்பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி கூடுவதோடு, உற்பத்தி வரியும் சேர்க்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.