உலகளவில் முன்னணியில்: காலணி ஏற்றுமதியில் இந்தியா முன்னிலை
இந்தியா தற்போது சர்வதேச அளவில் முக்கியமான காலணி ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக திகழ்ந்து வருவதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (FDDI) ஏற்பாடு செய்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர், விளையாட்டு துறை வேகமாக வளர்ந்து வருவதால், காலணித் துறைக்கு எதிர்காலத்தில் மிகப் பெரிய சந்தை வாய்ப்புகள் உருவாகி வருவதாக குறிப்பிட்டார்.
இந்தியா உலகில் காலணி ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றி வருவதாக கூறிய திரவுபதி முர்மு, நமது நாட்டின் ஏற்றுமதியை மேலும் உயரும் வகையில் காலணி தொழிலை அதிகப்படுத்திய அளவில் விரிவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.