நவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ₹1.70 லட்சம் கோடி – நிதியமைச்சகத்தின் புதிய அறிக்கை
நவம்பர் மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் விவரங்களை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், கடந்த ஆண்டு நவம்பரில் ₹1.69 லட்சம் கோடியான ஜிஎஸ்டி வருவாய், இந்த வருடம் நவம்பரில் சிறிய உயர்வுடன் ₹1.70 லட்சம் கோடியாகப் பதிவாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், 2024 அக்டோபருடன் ஒப்பிடும்போது இம்மாத வருவாய் 0.7% அதிகரிப்பு எனவும் விளக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், மொத்த உள்நாட்டு வருவாய் 2.3% குறைந்து ₹1.24 லட்சம் கோடியாகச் சரிந்துள்ளது. செப்டம்பர் 22 முதல் 375 வகை பொருட்களில் அமலாக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.