மழை-வெள்ள மீட்பு நடவடிக்கையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் டிட்வா புயல் மற்றும் தொடர்ச்சியான கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை கண்காணிக்க, மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் நேரடியாக ஆய்வு செய்தார்.
முன்னதாக, மாவட்டம் முழுவதும் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் ஒருங்கிணைந்த உணவு கூடம் மாவட்ட ஆட்சியரால் ஆய்வு செய்யப்பட்டது. இதற்காக தேசிய பேரிடர் மீட்பு படை, பேரிடர் மேலாண்மைத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல துறைகள் இணைந்து ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டன.
ஆட்சியர் ரவி பிரகாஷ், முகாம்களில் உள்ள குழந்தைகளுக்கு பால் மற்றும் சத்தான உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், அடிப்படை வசதிகள் முறையாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பின்னர் திருபட்டினச்சேரி மீனவ கிராமத்தில் ஆய்வு செய்யும் போது, படகுகளை பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, நேரு நகர் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த உணவு கூடத்தில் உணவு சமைக்கும் முறையும், பொதுமக்களுக்கு வழங்கும் உணவு தரமும், சுகாதார விதிகளுக்கு இணங்க இருப்பது என மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அதிகாரிகளுக்கு உணவு விரைவாக, தரமான நிலையில் மக்களுக்கு அனுப்பவேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.