இலங்கையில் டிட்வா புயல் பெரும் பாதிப்பு – கல்வி நிலையங்கள் டிசம்பர் 8 வரை செயல்பாடு நிறுத்தம்
டிட்வா புயலால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளநீர் பாதிப்பை கருத்தில் கொண்டு, இலங்கையில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் டிசம்பர் 8ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் மக்கள் வாழ்வு கடுமையாக சீர்குலைந்தது. வெள்ளத்தில் சிக்கி பல உயிரிழப்புகளும் சொத்துச்சேதங்களும் ஏற்பட்டன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு மற்றும் உதவி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், நிலைமை நிலைத்த நிலைக்கு திரும்பும் வரை கல்வி நடவடிக்கைகளை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனுபடி, இலங்கை உயர்கல்வி அமைச்சகம் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் டிசம்பர் 8ஆம் தேதி வரை செயல்படாது என உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.