நாடாளுமன்ற குளிர்கால அமர்வு – டெல்லியில் அனைத்து கட்சிகளும் ஒன்றுகூடி ஆலோசனை!
நாடாளுமன்றத்தின் குளிர்கால அமர்வை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் அனைத்து கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தப்பட்டது.
வரும் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19 வரை, விடுமுறை நாட்களை நீக்கி மொத்தம் 15 நாட்களுக்கு குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. இந்த அமர்வில் 10 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில், வாக்காளர் பட்டியலின் சிறப்பு திருத்தம், டெல்லி வாகன வெடிப்பு சம்பவம், வெளியுறவு கொள்கைகள் உள்ளிட்ட விவகாரங்களில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன. இதை முன்னிட்டு, டெல்லியில் அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி ஆலோசனை செய்தன.
கூட்டத்திற்குப் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும் கேட்க நாங்கள் தயாராக உள்ளோம். நாடாளுமன்றம் அனைவருக்கும் சொந்தமானது” என்று தெரிவித்துள்ளார்.