இலங்கை வெள்ள உதவிக்காக இந்தியாவின் ‘விக்ராந்த்’ போர்க் கப்பல் பணியில்
‘டிட்வா’ புயலின் தாக்கத்தால் கடந்த இரண்டு நாட்களாக இலங்கையில் நீடித்து வரும் மழை, கடும் வெள்ளத்தையும் மண்சரிவையும் உருவாக்கியுள்ளது. இதனால் 56 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில், இலங்கை அரசின் வேண்டுகோளை முன்னிட்டு, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பல் அங்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விக்ராந்த் கப்பலில் உள்ள ஹெலிகாப்டர்கள், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதும், அவசியமான உதவிகளை அளிப்பதும் போன்ற பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.