கேதார கௌரி விரதம்: ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு வீடுகள், கோயில்களில் பக்தி வழிபாடு
ஐப்பசி மாத அமாவாசை நாளை முன்னிட்டு, தமிழகமெங்கும் மக்கள் கேதார கௌரி விரதம் இருந்து நோன்பு கடைபிடித்து வருகின்றனர். இந்த நாளில் வீடுகள் மற்றும் கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
மக்கள் தேங்காய், வாழைப்பழம், கனிகள், பூக்கள், வெற்றிலை, பாக்கு, நோன்பு கயிறு போன்றவற்றை கொண்டு தெய்வத்தை வழிபட்டு, பின்னர் நோன்பு கயிறை கைகளில் கட்டிக் கொள்வது பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோயில்கள் அதிகாலை முதலே திறக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியைச் சேர்ந்த அர்ச்சகர் ஸ்ரீராம் கூறியதாவது:
“இன்று (அக். 21) மாலை 5.46 வரை அமாவாசை திதி நீடிக்கிறது. அதுவரை நோன்பு எடுக்கலாம். ஆனால் ராகு காலம் (பிற்பகல் 3.00 – 4.30 மணி) மற்றும் எமகண்டம் (காலை 9.00 – 10.30 மணி) நேரங்களில் நோன்பு தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.
ஆச்சார்யர்கள் கூறுவதாவது —
கேதாரம் என்பது வயலைக் குறிக்கும் சொல். பார்வதி தேவியே கேதாரம் எனும் வயல்வெளியில் தவம் இருந்து சிவபெருமானின் அருளைப் பெற்றதாலேயே, இந்த விரதம் ‘கேதார கௌரி விரதம்’ என அழைக்கப்படுகிறது.
இந்நாளில் மனதில் பசுமையான எண்ணங்களை வளர்த்துக் கொண்டு, பூஜையறையில் விளக்கேற்றி, சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியை தியானித்து ஆராதனை செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. அதேபோல், பாயசம், அப்பம் அல்லது சர்க்கரைப் பொங்கல் போன்ற நைவேத்தியம் செய்து வழிபாடு செய்யலாம்.
பக்தர்கள் ‘ஓம் நமசிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை நாள்பட கூறி, ருத்ரம் ஜபம் மற்றும் அம்பாள் துதி பாராயணம் செய்வது நல்ல பலன்களைத் தரும் என நம்பப்படுகிறது.
மேலும், அந்த நாளில் சிவபார்வதியை வணங்குவது, பசுவுக்கு அன்னம் வழங்குவது, மூத்த தம்பதியருக்கு புத்தாடை மற்றும் மங்களப் பொருட்கள் வழங்குவது போன்றவை சிறப்பு பலன்களை அளிக்கும் எனவும் கூறப்படுகிறது. இது தம்பதியருக்குள் ஒற்றுமையையும், அன்பையும் அதிகரிக்கச் செய்கிறது என ஆச்சார்யர்கள் விளக்குகின்றனர்ற்றி