“சரவெடி ஆயிரம் பத்தணுமா” – சூர்யாவின் ‘கருப்பு’ முதல் சிங்கிள் வெளியீடு
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் சூர்யா, த்ரிஷா, நட்டி, ஷிவதா, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவை ஜி.கே. விஷ்ணு மேற்கொள்கிறார்; இசையமைப்பை சாய் அபயங்கர் செய்துள்ளார்.
படத்தின் முதல் பாடலான “சரவெடி ஆயிரம் பத்தணுமா” என்ற லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் சூர்யாவின் இன்ட்ரோ சாங் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ற மாஸ் இசையும் அதிரடி வரிகளும் ரசிகர்களை கவர்கின்றன.
“சரவெடி ஆயிரம் பத்தணுமா, சுருட்டொரு லாரியா கொட்டட்டுமா, கெடாகறி நெத்திலி வஞ்சரமா, படையல நெறப்பி தள்ளட்டுமா…” என்ற வரிகள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.
சில இடங்களில் பாடல் வரிகள் தெளிவாகப் புரியாவிட்டாலும், திரையரங்குகளில் சூர்யா ரசிகர்களுக்கு இந்தப் பாடல் நிச்சயமாக ஒரு மாஸ் கொண்டாட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.