ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிகாரி பணியிடை நீக்கம் – கர்நாடகாவில் சர்ச்சை
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்சாகூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிர்வார் வட்டார மேம்பாட்டு அதிகாரி பிரவீன் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சி அக்டோபர் 12-ம் தேதி நடைபெற்றது. அரசுப் பணியில் இருப்பவர் அரசியல் அல்லது அமைப்புசார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத் துறை விதிமுறைகளை மீறியதாக மாவட்ட ஆணையர் அருந்ததி சந்திரசேகர் தெரிவித்தார்.
அதையடுத்து, பிரவீன் குமாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரை சஸ்பெண்ட் செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்க்தளம் உள்ளிட்ட அமைப்புகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அவை, “அரசு அரசியல் நோக்கத்துடன் நடவடிக்கை எடுத்துள்ளது” என குற்றம்சாட்டி, அதிகாரியை உடனடியாக பணியில் மீண்டும் அமர்த்துமாறு கோரியுள்ளன.