சீனாவின் துலான் ஏரி ஈரநிலப் பூங்காவில் அரிதாகக் காணப்படும் பறவைகள், மான்கள் ஆகியவை பெருமளவில் திரண்டு திகழும் அழகிய காட்சிகள் இணைய தளம் முழுவதும் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணம், கைதாம் பகுதியை ஒட்டி அமைந்துள்ள துலான் ஏரி, தேசிய அளவில் பாதுகாக்கப்பட்ட முக்கிய ஈரநிலப் பகுதியில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த ஏரிப்பகுதி, அரிய பறவைகள் மட்டுமல்லாமல், சீனாவில் அதிக முக்கியத்துவம் பெற்ற பாதுகாக்கப்படும் இனங்களில் ஒன்றான ‘டோல்’ எனப்படும் ஆசிய காட்டு நாய்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளின் முக்கிய வாழிடமாக திகழ்கிறது.
இதில் உப்புநீர் தாவரங்கள் சூழ்ந்த பருவகால ஈரநிலங்கள், தெளிந்த நீரைக் கொண்ட ஏரிகள் போன்ற தனித்துவமான இயற்கை அமைப்புகள் காணப்படுகின்றன.
மேலும், இலையுதிர் காலத்தில் ஏற்படும் தனிப்பட்ட உப்பு தாவரங்களின் நிற மாற்ற காட்சிக்காகவும், சுற்றுச்சூழல் சமநிலையைக் காக்கும் அதன் பங்களிப்பிற்காகவும் இந்தப் பூங்கா அறியப்படுகிறது.
பறவைகள் அதிகம் தங்கும் சரணாலயமாக விளங்கும் இப்பகுதியில், தற்போது அரிய வகை பறவைகள் மற்றும் மான்கள் அதிக அளவில் சுற்றித் திரியும் காட்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.