கனடாவில் இந்திய தேசியக் கொடி அவமதிப்பு – கடும் எதிர்ப்பு
காலிஸ்தான் ஆதரவு வாக்கெடுப்பு நடைபெற்ற இடத்தில் இந்தியாவின் தேசியக் கொடி அவமதிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள காணொளிகள், இந்தியர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலிஸ்தான் எனும் தனிநாடை உருவாக்க வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க, கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் சீக்கியர்களின் ஒரு அமைப்பு வாக்கெடுப்பு நடத்தியது.
இந்த நிகழ்வின் போது, இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் முழங்கப்பட்டதோடு, தேசியக் கொடியை அவமதிக்கும் வீடியோக்களும் வெளியானது. இந்த சம்பவம் இந்தியர்களில் அதிருப்தியையும் கடும் கோபத்தையும் தூண்டியுள்ளது.