அமெரிக்காவில் நடைபெறும் பாரம்பரிய “வான்கோழி மன்னிப்பு” நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்றார். இறைச்சிக்காக கொல்லப்படும் வான்கோழியை விடுவிக்கும் இந்த வழக்கமான நிகழ்வில், டிரம்ப் அந்தப் பறவையை மன்னித்து விடுவிக்கும் நிகழ்ச்சியை வழிநடத்தியார்.
அப்போது, வான்கோழியின் குரலை பின்பற்றி டிரம்ப் திடீரென சத்தம் போட்டதால், அங்கு இருந்தோர் அனைவரும் சிரிப்பில் மூழ்கினர்.
இந்த விழா 1863 முதல் ஒவ்வொரு ஆண்டு அமெரிக்க அதிபர்களாலும் வெள்ளை மாளிகையில் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.