வியட்நாமில் பெய்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் 100-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிக மழையால் ஏற்பட்ட நீர்மட்ட உயர்வில் 52 ஆயிரம் வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
அதே நேரத்தில், ஐந்து லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களும் வணிக நிறுவனங்களும் மின்சாரம் இன்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பருவநிலை மாற்றத்தின் தாக்கமாக வியட்நாம் தீவிர மழையும் நிலச்சரிவுகளையும் எதிர்கொண்டு வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் ஆபத்தான மற்றும் பாதுகாப்பற்ற பகுதிகளில் வசித்து வருவதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.