இந்தியாவுடன் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு – பாகிஸ்தானின் சிந்து மாகாணம்?

Date:

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் மீண்டும் இந்தியாவுடன் சேரும் வாய்ப்பை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டிருப்பது, புவியியல் அரசியலில் புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது. இதுகுறித்த விரிவான செய்தி தொகுப்பு இதோ.

டெல்லியில் நடைபெற்ற சிந்து சமாஜ் மாநாட்டில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், பிரிவினையால் பாகிஸ்தானுக்கு சென்ற சிந்து பகுதி ஒருநாளில் இந்தியாவுடன் மீண்டும் இணைய வாய்ப்புண்டு என்று தெரிவித்தார். இந்திய நாகரிகத்தின் முதன்மை தாயகங்களுள் ஒன்றான சிந்து சமவெளி நாகரிகம் உருவான இடமுமாகிய சிந்து மாகாணம், ஒவ்வொரு இந்துவுக்கும் புனிதமான சிந்து நதி பாயும் மண்ணாக இருப்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.

பிரிவினை காலத்தில் சிந்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த பெரும்பாலான இந்துக்கள் அங்கிருந்த கொடுமைகளால் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல நேரிட்டது. சிந்து பகுதி இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டது அங்கிருந்த இந்துக்களால் ஏற்கப்படவில்லை என்பதை பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தனது நினைவுகளில் பதிவு செய்துள்ளார். சிந்தில் வாழ்ந்த முஸ்லிம்களும் சிந்து நதியை அதே மரியாதையுடன் பார்த்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிவினைக்குப் பின்னரும் அங்கே தங்கியிருந்த இந்துக்கள் பலர் கொல்லப்பட்டதோடு, இன்றளவும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சிறுபான்மையான இந்துக்கள், மதமாற்றம் உள்ளிட்ட ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்திய எல்லைகளுக்கு அருகே உள்ள நாடுகளில் இந்துக்கள் அனுபவிக்கும் இத்தகைய துன்பங்களைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக ராஜ்நாத் சிங் விளக்கினார்.

எல்லைகள் நிரந்தரமானவை அல்ல என்பதை வலியுறுத்திய அவர், கலாச்சாரம் மற்றும் நாகரீக அடிப்படையில் சிந்து எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது என்றும், மாற்றமான சூழ்நிலையில் ஒருநாள் சிந்து மீண்டும் இந்தியாவுடன் இணைய வாய்ப்புண்டு என்றும் தெரிவித்தார்.

இதற்கு முன்பாக மோரோக்கோவில் இந்திய வம்சாவளியினரிடம் உரையாற்றியபோது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் தாமாகவே பாகிஸ்தானுக்கு எதிராக எழுந்து வருகின்றனர்; எனவே பெரும் ராணுவ நடவடிக்கைகள் இல்லாமலேயே பி.ஓ.கே இந்தியாவுடன் இணையும் நிலை வரும் எனும் நம்பிக்கையையும் அவர் தெரிவித்திருந்தார்.

ராஜ்நாத் சிங்கின் இந்த சமீபத்திய கருத்தை வரவேற்ற சிந்து முத்தஹிதா மஹாஸ் தலைவர் ஷாஃபி பர்பத், சிந்துதேசத்தின் நீண்டகால சுதந்திர விருப்பத்துக்கும் இந்தியாவுடனான வரலாற்று உறவுக்கும் இது ஒரு முக்கிய ஊக்கமாக இருக்கும் என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், இந்தியா – சிந்து தேசம் ஆகியவற்றுக்கு இடையேயான “பரஸ்பர மரியாதை, இறையாண்மை, பண்பாட்டு மற்றும் நாகரிக பிணைப்புகளை” அடிப்படையாகக் கொண்ட கூட்டாட்சித் தொடர்புக்கு சிந்துதேசம் எப்போதும் தயாராக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ரகசியங்களை கள்ளமாக விற்ற பாகிஸ்தான் அணு நாயகன் – அமெரிக்க உளவு அதிகாரியின் வெடிக்கும் ஒப்புதல்

பாகிஸ்தானின் அணுசக்தி தந்தை என மதிக்கப்பட்ட அப்துல் காதீர் கான், வெளிநாடுகளுக்கு...

அதிக வரியின் தாக்கத்தால் பிரிட்டனை விட்டு வெளியேறும் கோடீஸ்வரர்கள்

இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சி மேற்கொண்ட வரி மாற்றங்களும், உயர்த்தப்பட்ட வரி சுமையும்...

தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேக்கம் – நோயாளிகள் அவதி

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்கள்...

டெல்லி தாக்குதலைச் சுற்றிய புதிய வெளிச்சம் – உமர் நபி மற்றும் கூட்டாளிகள் இடையே ஆழமான சித்தாந்த முரண்பாடு!

டெல்லியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்துக்கு இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில்,...