பாலிவுட்டின் மூத்த நடிகர் தர்மேந்திரா மறைவு – சினிமா உலகம் துயரத்தில்!

Date:

இந்தி திரையுலகின் பிரபலமான மற்றும் போர்வீரனென போற்றப்பட்ட மூத்த நடிகர் தர்மேந்திரா உடல்நலக் குறைவு தீவிரமடைந்து காலமானார். அவரது மரணம் குறித்து திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதய நோய் மற்றும் சுவாசக்குறைபாடு காரணமாக மும்பையின் ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் பல நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தார். சில நாட்களுக்கு முன் அவர் வெண்டிலேட்டர் உதவி பெறுவதாக தகவல்கள் வெளியானதும், ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதற்கு பின்னர், அவர் நிலைமை ஸ்திரமாக உள்ளது என அவரது மனைவி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹேமமாலினி, மகள் நடிகை ஈஷா தியோல் ஆகியோர் விளக்கம் அளித்தனர். சிகிச்சைக்கு பதிலளித்ததால் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ஆனால் வீட்டில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த தர்மேந்திராவின் உடல்நிலை திடீரென மேலும் மோசமடைந்து உயிரிழந்தார்.

இந்த செய்தி வெளியாகிய உடனேயே பாலிவுட் உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மறைந்த நட்சத்திரத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேக்கம் – நோயாளிகள் அவதி

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்கள்...

டெல்லி தாக்குதலைச் சுற்றிய புதிய வெளிச்சம் – உமர் நபி மற்றும் கூட்டாளிகள் இடையே ஆழமான சித்தாந்த முரண்பாடு!

டெல்லியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்துக்கு இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில்,...

சேலத்தில் தலைவாசல் காய்கறி சந்தை சேறும், சகதியுமாக… விவசாயிகள் சங்கம் அதிருப்தி – மாவட்ட ஆட்சியரிடம் மனு

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள தினசரி காய்கறி சந்தை, தொடர்ச்சியான...

கார்ல்சனை வீழ்த்திய குகேஷ் – இந்திய சதுரங்கத்தின் எதிர்காலம் அவரது கையில் உள்ளது: எடப்பாடி பழனிசாமி பாராட்டு

நார்வே செஸ் போட்டியில் உலக சாம்பியன் மக்னஸ் கார்ல்சனை சந்தித்து வெற்றி...