டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின், புதிய சியரா மிட்-சைஸ் எஸ்யூவி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டாடா நிறுவனம் இந்த புதிய சியரா எஸ்யூவியை வரும் 25ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிட்டுள்ளது. விலை விவரங்கள் மற்றும் முழுமையான வேரியண்ட் தகவல்கள் அன்றைய தினமே அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2003ஆம் ஆண்டு வரை விற்பனையில் இருந்த பழைய சியரா மாடல், இருபது ஆண்டுகளுக்கு பின் தற்போது முற்றிலும் புதிய வடிவமைப்பில் மற்றும் நவீன தொழில்நுட்பங்களுடன் மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.