கேரளாவில் நடந்த விபத்தில் காயமடைந்த மணமகளுக்கு மருத்துவமனைக்கே சென்று தாலி கட்டிய மணமகனின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
ஆலப்புழா மாவட்டம் முதலசேரியை சேர்ந்த ஆவணி, ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். தும்போலி பகுதியை சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர் ஷாரோனுடன் அவருடைய திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ஆலப்புழாவில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், திருமண நாளன்று ஆவணி அழகு நிலையத்துக்கு காரில் சென்றபோது, வழியில் காரின் கட்டுப்பாடு இழந்து மரத்தில் மோதியது. இந்த விபத்தில் ஆவணி உள்பட இருவரும் கடுமையாக காயமடைந்தனர்.
அவர்கள் எர்ணாகுளம் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத் தகவலை அறிந்த மணமகன் ஷாரோன் உடனே மருத்துவமனைக்கு சென்று, படுக்கையிலிருந்த ஆவணிக்கு அவருடைய சம்மதத்துடன் தாலி கட்டினார்.
மருத்துவமனையில் நடந்த இந்த திருமணம், அப்பகுதி மக்களையும் சமூக வலைதள பயனாளர்களையும் பெரிதும் நெகிழ வைத்துள்ளது.