இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதத்தில் ஏற்பட்ட மோதலை, சீனா தனது ஆயுத திறன்களை பரிசோதிப்பதற்காக பயன்படுத்திக் கொண்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் ‘‘ஆபரேஷன் சிந்தூர்’’ என்ற பெயரில் பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினது. இதன் பின்னர் இரு நாடுகளின் ராணுவத்தினருக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.
இந்த சூழ்நிலையை சீனா தனது நலனுக்குப் பயன்படுத்திக் கொண்டதாக அமெரிக்க நாடாளுமன்ற குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதல் நிலையை சீனா தனது நவீன மற்றும் மேம்பட்ட ஆயுத அமைப்புகளுக்கான சோதனை தளமாகவும், வெளிப்படுத்தும் மேடையாகவும் மாற்றியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும், இந்த மோதலின் போது பாகிஸ்தான் சீனாவிடமிருந்து பெற்ற ஆயுதங்களையும் உளவுத் தகவல்களையும் அதிக அளவில் பயன்படுத்தியதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.