பீகார் மாநில பாஜக இளைய சட்டமன்ற உறுப்பினரான மைதிலி தாக்கூர், பிரபலமான ‘கண்ணான கண்ணே’ பாடலை இன்னொரு முறை பாடியுள்ளார்.
தனது சமூக வலைதளப் பதிவில், இந்தப் பாடலை தாம் 5 ஆண்டுகள் முன்பு பாடியதற்கான காணொளி தற்போது மீண்டும் இன்டர்நெட்டில் வைரலாகி வருவதாகவும், அது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவதால் மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன் விருப்ப பாடகர்களில் ஒருவரான சித் ஸ்ரீராம் இந்த பாடலை பாடியிருப்பது, இசையை இமான் அமைத்திருப்பது உள்ளிட்ட தகவல்களையும் குறிப்பிட்டுள்ளார்.
தனது குரல் இன்னும் முழுமையாக சீராகாத நிலையில் இருந்தாலும், ரசிகர்களின் நேசத்திற்கு பதிலளிக்கவே இந்தப் பாடலை மீண்டும் பாடியதாக மைதிலி தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார்.