பெங்களூருவில் நடந்த CMS பணப் போக்குவரத்து வாகனக் கொள்ளை வழக்கில், ஒரு காவலர் உட்பட ஐந்து பேரை போலீசார் பிடித்துள்ளனர்.
19 ஆம் தேதி பகல் நேரத்தில் நடந்த இந்த பெரும் கொள்ளை, நாடு முழுவதும் கவனம் ஈர்த்தது. சம்பவத்திற்குப் பின், பெங்களூரு குற்றப்பிரிவு விசாரணையை கர்நாடகாவை மட்டும் அல்லாது, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டிற்கும் விரிவுபடுத்தியது.
இவ்வழக்கைத் தெளிவுபடுத்துவதற்காக இரண்டு டிசிபி, இரண்டு ஏடிஷனல் கமிஷனர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் இணைந்து இயங்கினர்.
கடுமையான விசாரணையின் பின்னர், ஆந்திராவைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி ரவி, காவலர் அன்னப்பன், சேவியர் ஆகியோர் உள்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
CMS வாகனத்திலிருந்து மொத்தம் ₹7 கோடி 11 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், அதில் ₹6 கோடி 70 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை போலீசார் மீட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.