ரஷ்யா–உக்ரைன் போர் முடிவிற்கு வருமா? புதிய நிறுத்தத் திட்டம் குறித்து சர்ச்சை

Date:

ரஷ்யா–உக்ரைன் போர் முடிவிற்கு வருமா? புதிய நிறுத்தத் திட்டம் குறித்து சர்ச்சை

ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா மற்றும் அமெரிக்கா இணைந்து புதிய போர்நிறுத்தத் திட்டத்தை வடிவமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அமைதி திட்டத்தில் உள்ள நிபந்தனைகள் என்ன? இது உண்மையிலேயே போரை நிறுத்தும் வழியாக அமையுமா? என்பதே தற்போது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு, 8 போர்களை நிறுத்தியதாக பெருமையாகச் சொல்லி வரும் ட்ரம்ப், ஒன்பதாவது முயற்சியாக ரஷ்யா–உக்ரைன் போரையும் முடிக்க முனைந்தார். ரஷ்ய அதிபரை அலாஸ்காவில் சந்தித்ததும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை வெள்ளை மாளிகையில் அழைத்து பேசியதும், சவூதியில் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்ததும் ஆகிய பல முயற்சிகளுக்குப் பிறகு, இப்போது 28 அம்சங்கள் கொண்ட புதிய அமைதி திட்டத்துக்கு அவர் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த 28 அம்சத் திட்டம், அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ரஷ்யாவின் பிரதிநிதி கிரில் டிமித்ரியேவ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இது குறித்து அமெரிக்கா அல்லது ரஷ்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை என்றாலும், நீடித்த அமைதி பெற இருவரும் கடினமான சமரசங்களை செய்ய வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள் — பெரும்பாலும் உக்ரைனுக்கான நிபந்தனைகள்:

  • டான்பாஸ் பகுதிகளை ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் விட்டு கொடுக்க வேண்டும்.
  • கிரிமியா உட்பட ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும்.
  • உக்ரைன் தனது இராணுவத்தை 8 இலட்சத்திலிருந்து 4 இலட்சமாகக் குறைக்க வேண்டும்.
  • நீண்ட தூர ஏவுகணைகள் அனைத்தையும் உக்ரைன் கைவிட வேண்டும்.
  • நேட்டோவில் சேராமல், நடுநிலை நாடாகவும் அணு ஆயுதமற்ற நாடாகவும் இருக்க வேண்டும்.
  • ரஷ்ய மொழியை உக்ரைனின் ஒரு அதிகாரப்பூர்வ தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்.
  • ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் கிளையை உக்ரைன் அரசு அங்கீகரிக்க வேண்டும்.
  • அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான 100 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும்.

இந்த நிபந்தனைகள் அனைத்தும் முன்பு இஸ்தான்புல் பேச்சுவார்த்தையின் போது ரஷ்யா முன்வைத்த கோரிக்கைகளுடன் ஒரே மாதிரியாக உள்ளன.

ரஷ்யா தரப்பில் உள்ள நன்மைகள்:

  • ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும்.
  • G7 கூட்டமைப்பில் ரஷ்யா சேர்க்கப்பட்டு, அது மீண்டும் “G8” ஆக மாறும்.

ஆனால், ரஷ்யா பால் ஏற்க வேண்டிய பொறுப்புகள் என்ன என்பதை இந்தத் திட்டம் தெளிவாக குறிப்பிடவில்லை.

இந்த அமைதி ஒப்பந்தத்தின் செயல்பாடுகளை அதிபர் ட்ரம்ப் தலைமையிலான விசேஷ கவுன்சில் கண்காணிக்கும் என்றும், ஒப்பந்த மீறப்பட்டால் உடனுக்குடன் தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தைப் பற்றி ஆலோசிப்பதற்காக, அமெரிக்காவின் மிக உயரிய ராணுவ அதிகாரிகள் குழு உக்ரைன் சென்றுள்ளது. இது, ட்ரம்ப் இரண்டாவது முறையாக ஆட்சியை ஏற்ற பின் உக்ரைனுக்கு செல்லும் முதல் முக்கிய குழுவாகும்.

ஸ்டீவ் விட்காஃப், உக்ரைன் இதுவரை மறுத்து வந்த முக்கிய கோரிக்கைகளையும் இப்போது ஏற்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் திட்டம் ரஷ்யாவுக்கு சாதகமாக உள்ளதா? என்ற கேள்விக்கு வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், உக்ரைன் எந்தவொரு இராஜதந்திர முயற்சிகளையும் தடுக்கும் வகையில் நடக்காது என அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். 100 மில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஜெலென்ஸ்கி, ரஷ்யா–அமெரிக்கா இணைந்து தயாரித்துள்ள இந்த 28 அம்சத் திட்டத்தை ஏற்கலாம் என்று பல சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சிவகாசியில் சாலையில் ரீல்ஸ் எடுத்த இளைஞர்கள் காரணமாக விபத்து — அதிர்ச்சி சம்பவம்

சிவகாசியில் ரீல்ஸ் வீடியோ படமாக்கிக் கொண்டிருந்த சில இளைஞர்களின் செயலால், அந்த...

“தேசிய கட்டமைப்பில் நூற்றாண்டு… ஆர்.எஸ்.எஸ் உடன் என் அனுபவங்கள்” — திறந்த மனதுடன் கூறும் ஆளுநர் ஆர். என். ரவி

“இந்த விஜயதசமி திருநாளில், நாட்டின் கட்டமைப்பை நோக்கி ஒரு நூற்றாண்டு காலப்...

“இதுபோன்ற அபாயகரமான கட்டிடத்தில் உங்கள் குழந்தைகளை படிக்கவிடுவீர்களா?” — அண்ணாமலை கேள்வி

அரசுப் பள்ளிகளில் கல்வி கற்கும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் பாதுகாப்பை...

இணை இயக்குநருக்கு கார் பரிசளித்த நடிகர்–இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்

இணை இயக்குநருக்கு கார் பரிசளித்த நடிகர்–இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தனது முதல் படத்திலிருந்தே...