இணை இயக்குநருக்கு கார் பரிசளித்த நடிகர்–இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்
தனது முதல் படத்திலிருந்தே இணை இயக்குநராக இணைந்து பணிபுரிந்து வரும் நண்பருக்கு நடிகர்–இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
கடந்த மாதம் 17 ஆம் தேதி தீபாவளி வெளியீடாக வந்த டியூட் திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வசூல் சாதனை படைத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனது நெருங்கிய நண்பரும், முதல் படத்திலிருந்து இணை இயக்குநராக பணியாற்றி வரும் ரமேஷ் நாராயணசாமிக்கு புதிய கார் ஒன்றை பிரதீப் ரங்கநாதன் பரிசளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.