கோவாவில் நடைபெற்று வரும் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி உற்சாகமாக முன்னேறி வருகிறது. 82 நாடுகளைச் சேர்ந்த 206 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் இந்தப் பெரும் போட்டி, மொத்தம் 8 சுற்றுகளைக் கொண்ட நாக் அவுட் முறை தொடராக நடைபெறுகிறது.
முதல் 3 சுற்றுகளும் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், நேற்று ஓய்வுநாள் வழங்கப்பட்டது. செஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 4-வது சுற்றுப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன.
இந்திய வீரர்களில் ஆர். பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, பி. ஹரிகிருஷ்ணா, வி. பிரணவ், வி. கார்த்திக் உள்ளிட்டோர் 4-வது சுற்றிற்குத் தகுதி பெற்று இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
இன்று நடைபெறும் முக்கிய மோதல்களில்,
– ஆர். பிரக்ஞானந்தா, ரஷ்யாவின் வல்லுநர் டேனியல் துபோவ்-ஐ எதிர்கொள்கிறார்.
– அதே நேரத்தில், இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் அர்ஜூன் எரிகைசி, உலக அறிந்த ஹங்கேரியின் அனுபவ செஸ் வீரர் பீட்டர் லேகோவுடன் நேருக்கு நேர் மோதவுள்ளார்.
டாப் நிலை வீரர்கள் பலர் இடம் பெற்றிருக்கும் 4-வது சுற்று, போட்டியின் மிக முக்கியமான கட்டமாக மதிப்பிடப்படுகிறது. அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் ஒவ்வொரு பதவும் உலக செஸ் தரவரிசை, சர்வதேச போட்டித் தகுதி மற்றும் மேடைக்கான வாய்ப்புகளைப் பெரிதும் தீர்மானிப்பதால், இந்த மோதல்களுக்கு உலகம் முழுவதும் செஸ் ரசிகர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.