56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) கோவாவில் நாளை தொடங்குகிறது. 28ஆம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில், 81 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 240 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா தலைமையிலான குழு விழாவை முன்னெடுத்து வருகிறது.
தொடக்க விழாவில், உலக சினிமா பிரிவின் ‘ஓபனிங் பிலிம்’ ஆக கேப்ரியல் மஸ்காரோ இயக்கிய ‘தி ப்ளூ டிரெயில்’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது.
1975ல் கே. பாலசந்தர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் அறிமுகமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், திரைப்படத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்த சிறப்பு சாதனையை பாராட்டும் வகையில், அவர் விழாவில் கௌரவிக்கப்படுகிறார்.
தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் 3 படங்கள்
ரஜினி கௌரவிக்கப்படுவதோடு, இவ்வாண்டு திரைப்பட விழாவில் மூன்று தமிழ்ப் படங்கள் முக்கிய பிரிவுகளில் இடம் பெற்றுள்ளன:
1. அமரன்
- சர்வதேச போட்டிப் பிரிவு – ‘தங்க மயில்’ விருதுக்கான பரிந்துரை
- நடிகர்: சிவகார்த்திகேயன்
- இயக்கம்: ராஜ்குமார் பெரியசாமி
- தயாரிப்பு: கமல் ஹாசன்
- விழாவின் ஓபனிங் பிலிம் ஆகவும் திரையிடப்படுகிறது.
2. ஆனிரை
- ‘இந்தியன் பனோரமா’ பிரிவு
- இயக்கம்: இ.வி. கணேஷ்பாபு
- இன்று திரையிடப்படுகிறது.
3. பிறந்தநாள் வாழ்த்துக்கள்
- ‘இந்தியன் பனோரமா’ பிரிவு
- இயக்கம்: ராஜு சந்திரா
- இதுவும் இன்று திரையிடப்படுகிறது.