ஃபிபா உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் போர்ச்சுகல் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அர்மேனியாவை 9–1 என்ற புரளவான கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியது.
போர்ச்சுகல் அணிக்காக ஜோவோ நெவ்ஸ் (30, 41, 81) மற்றும் புருனோ பெர்னாண்டஸ் (45+3, 52, 72) தலா மூன்று கோல்கள் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தனர்.
மேலும், ரெனாடோ வெய்கா ஆட்டம் தொடங்கிய 7-ஆம் நிமிடத்தில் கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து 28-ஆம் நிமிடத்தில் கோன்கலோ ரமோஸ் வலைக்குள் பந்தை தள்ளினார்.
போட்டியின் கூடுதல் நேரமாகிய 90+2 நிமிடத்தில் பிரான்சிஸ்கோ கான்சிகாவோ மேலும் ஒரு கோல் சேர்த்தார்.
அர்மேனிய அணிக்காக 18-ஆம் நிமிடத்தில் ஸ்பெர்ட்சியன் மட்டுமே ஒரு ஆறுதல் கோல் அடித்தார்.