‘காற்று வெளியிடை’, ‘செக்க சிவந்த வானம்’, ‘ஹே சினாமிகா’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை அதிதி ராவ் ஹைதாரி, இந்தியா மற்றும் தெலுங்கு சினிமாவில் மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் சித்தார்த்தை காதலித்து திருமணம் செய்த இவர், தற்போது தனது பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி சிலர் வாட்ஸ்அப் மூலம் மோசடி செய்து வருவதைக் குறித்தும் சமூக ஊடகங்களில் எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிலே அவர் கூறியதாவது:
“எனது பெயர் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி, ஒருவர் வாட்ஸ்அப்பில் மோசடி செய்கிறார். தனிப்பட்ட தொலைபேசி எண்ணை பயன்படுத்தி, புகைப்படக் கலைஞர்களிடம் ‘போட்டோஷூட்’ வேலைக்கு தொடர்பு கொண்டு ஏமாற்றுகிறான்.
நான் இதுபோன்று யாரையும் தொடர்பு கொள்ளமாட்டேன். தொழில் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திற்கும் தனிப்பட்ட எண்ணைப் பயன்படுத்த மாட்டேன். அனைத்தும் எனது அதிகாரப்பூர்வ குழுவின் வழியே நடக்கும். அந்த எண்ணுடன் தொடர்பு கொள்ள வேண்டாம்” என்று அவர் எச்சரித்துள்ளார்.