மெக்சிகோவில் அதிபர் க்ளாடியா ஷீன்பாம் ஆட்சியில் ஊழல், வன்முறை அதிகரித்துவிட்டதாக குற்றம் சாட்டும் ஜென்ஸீ இளைஞர்கள் நடத்திய போராட்டம் கடுமையான மோதல்களாக மாறியுள்ளது.
சனிக்கிழமை, தலைநகரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு அதிபர் மாளிகையை நோக்கி அமைதியாக பேரணியாக சென்றனர். ஆனால் பின்னர் கூட்டம் பெருகியதால், அவர்கள் மாளிகையை முற்றுகையிட்டு சூறையாட முயன்றனர். இதனால் பாதுகாப்புப் படையினரும் போராட்டக்காரர்களும் நேருக்கு நேர் மோதினர்.
இளைஞர்கள்,
- நாட்டில் ஊழல் அதிகரித்திருக்கும்,
- கிரிமினல் கும்பல்களின் தாக்கம் கட்டுக்கடங்கி விட்டது,
- அதிகாரப் பதவியில் இருப்போருக்கும் கூட பாதுகாப்பு இல்லை
என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
சமீபத்தில் உருவாப்பான் நகர மேயர் கார்லஸ் ரோட்ரிகுவேஸ் போதைப் பொருள் கும்பல்களால் கொல்லப்பட்ட சம்பவமும் இளைஞர்களின் கோபத்தை அதிகரித்திருந்தது.
வன்முறை மோதல்களில்
- 100-க்கும் மேற்பட்ட போலீசார்,
- 20 போராட்டக்காரர்கள்
காயமடைந்தனர்.
போராட்டத்தில் சிலர் கடற்கொள்ளையர்களை குறிக்கும் கருப்பு கொடியையும் ஏந்தி, “நாட்டில் ஆட்சி இல்லை, கொள்ளையர்கள் ஆட்சி செய்கிறார்கள்!” என்று முழங்கினர்.
இந்த சம்பவத்துக்கு பதிலளித்த அதிபர் ஷீன்பாம், “வலதுசாரி கட்சிகளே இளைஞர்களை தூண்டிவிட்டன; சமூக வலைதளங்கள் வழியாக கூட்டத்தைச் சேர்த்துள்ளனர்” என்று கூறினார்.
இலங்கை, வங்கதேசம், நேபாளம் போன்ற நாடுகளில் சமீபத்தில் ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் செய்திகளில் இடம் பெற்ற நிலையில், தற்போது மெக்சிகோவும் அதே வரிசையில் இணைந்துள்ளது.