காஷ்மீரில் தீவிரவாத மருத்துவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் பலி, 32 பேர் காயம்

Date:

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் தீவிரவாத மருத்துவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட குண்டு வெடித்ததில், போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். மேலும் 32 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் காவல் நிலைய கட்டிடம் கடுமையாக சேதமடைந்தது.

அக்டோபர் நடுப்பகுதியில், ஜம்மு காஷ்மீரில் உள்ள புன்போரா மற்றும் நவ்காம் உள்ளிட்ட இடங்களில், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரைத் தாக்குவதாக அச்சுறுத்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, சிறப்பு புலனாய்வுக் குழு முதலில் உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூரில் அடில் என்ற மருத்துவரைக் கைது செய்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள அல் பாலா மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்த டாக்டர் முசம்மில் ஷகீல் கைது செய்யப்பட்டார்.

அவரது இரண்டு வசிப்பிடங்களிலும் நடத்தப்பட்ட சோதனைகளில், 360 கிலோ அம்மோனியம் நைட்ரேட்,

கள், ரசாயனங்கள், டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட 2,900 ஆயிரம் கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு காரில் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. காரின் உரிமையாளர் பெண் மருத்துவர் ஷாகின் மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர்.

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பல மருத்துவர்களை மூளைச்சலவை செய்து நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டது தெரியவந்தது. இதற்கிடையில், கடந்த 10 ஆம் தேதி, டெல்லி செங்கோட்டை அருகே டாக்டர் உமர் நபி தனது காரை வெடிக்கச் செய்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர். அவர் அல்ஃபாலா மருத்துவமனையிலும் பணியாற்றினார் என்பது தெரியவந்தது. இதன் மூலம் ‘வெள்ளை காலர்’ பயங்கரவாத சதி இருப்பது தெரியவந்தது. தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், ஃபரிதாபாத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களின் ஒரு பகுதி காஷ்மீரில் உள்ள நவ்காம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, அங்கு இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக காவல்துறை, காவல்துறை விசாரணை அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள், வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் பலர் வெடிபொருட்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு அவர்கள் தடயவியல் மற்றும் ரசாயன பரிசோதனையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். பின்னர், எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் பலத்த சத்தத்துடன் வெடித்தன. இதில், காவல் நிலைய கட்டிடம் கடுமையாக சேதமடைந்தது. விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். போலீசார் ஆம்புலன்ஸ்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். 32 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

காஷ்மீர் டிஜிபி நளின் பிரபாத் கூறுகையில், “அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருட்களை ஆய்வு செய்த பிறகு, அவற்றை செயலிழக்கச் செய்ய நிபுணர்கள் அவற்றை பேக் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவை வெடித்தன.” மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் (காஷ்மீர் பிரிவு) பிரசாந்த் லோகண்டே நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஹரியானாவில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் ரசாயனங்கள் காஷ்மீரில் உள்ள நவ்காம் காவல் நிலைய வளாகத்தில் உள்ள திறந்தவெளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. வழக்கமான நடைமுறைகளின்படி 14 ஆம் தேதி இரவு 11.20 மணிக்கு தடயவியல் நிபுணர்கள், போலீசார் மற்றும் பிறரால் வெடிபொருட்கள் பரிசோதிக்கப்பட்டன. இருப்பினும், அவை எதிர்பாராத விதமாக வெடித்தன. இதில் 9 பேர் இறந்தனர். 27 போலீசார், 2 வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் 3 பொதுமக்கள் உட்பட 32 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் ஆதரவளிக்கும். இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது எதிர்பாராத விபத்து. பொதுமக்கள் இது குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம். அவர் இவ்வாறு கூறினார்.
லெப்டினன்ட் கவர்னரின் இரங்கல்: ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா தனது எக்ஸ் வலைத்தளப் பதிவில் கூறியதாவது: நவ்காம் காவல் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு தேவையான உதவிகளை வழங்கும். குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். அவர் இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“முஸ்லிம் லீக், மாவோயிஸ்ட், காங்கிரஸை நாடு நிராகரித்துவிட்டது” — பிரதமர் நரேந்திர மோடி

முஸ்லிம் லீக், மாவோயிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை இந்திய மக்கள் நிராகரித்துவிட்டதாக...

நவம்பர் 19-ஆம் தேதி பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்புக்கு 3,000 போலீஸார் பணியில்

பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19-ஆம் தேதி கோவை வருகை தருகிறார்....

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை பிகார் மக்கள் நிராகரித்துவிட்டனர்: அண்ணாமலை

பிகாரில் வாக்குத் திருட்டு குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை அங்குள்ள மக்கள்...

பெண் வழக்கறிஞர்கள் அதிகரிப்பு — எதிர்காலத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கையும் உயரும்: உச்சநீதிமன்ற நீதிபதி எம். எம். சுந்தரேஷ்

பெண் வழக்கறிஞர்கள் அதிகரித்து வருவது முக்கிய முன்னேற்றம் என்றும், இதனால் வருங்காலத்தில்...