சுவாச நோய்களுக்கு மருந்து: இந்தியாவில் கண்டுபிடிப்பு

Date:

சுவாச நோய்களுக்கு மருந்து: இந்தியாவில் கண்டுபிடிப்பு

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ஜிதேந்திர சிங் நேற்று தெரிவித்ததாவது:

இந்தியாவில் முதல் முறையாக ‘நபித்ரோமைசின்’ என்ற பெயரில் ஒரு புதிய ஆன்டிபயாட்டிக் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுவாச நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. குறிப்பாக, புற்றுநோயாளிகள் மற்றும் கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகுந்த பயனுள்ளதாகும்.

இந்த ஆன்டிபயாட்டிக் மருந்து முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, மருத்துவ ரீதியாகச் சோதிக்கப்பட்ட முதல் மூலக்கூறாகும். இது இந்திய மருந்துத் துறையில் தன்னிறைவு நோக்கி ஒரு முக்கிய முன்னேற்றம் எனக் கூறப்படுகிறது.

மேலும், இந்தியா இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித ஜீனோம்களை வரிசைப்படுத்தியுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு ‘நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசின்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தந்தையின் அறிவுரையை மதித்து வேட்புமனுவை தாக்கல் செய்யாத பாஜக அதிருப்தி தலைவர் – பிஹாரில் சுவாரஸ்யம்

தந்தையின் அறிவுரையை மதித்து வேட்புமனுவை தாக்கல் செய்யாத பாஜக அதிருப்தி தலைவர்...

பாக்–ஆப்கன் இடையே 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தம்

பாக்–ஆப்கன் இடையே 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தம் தெஹ்ரிக்-இ-தாலிபான் தீவிரவாதிகள்...

பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம்: திருமூர்த்திமலை கோயில் வளாகம் நீரில் மூழ்கியது

பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம்: திருமூர்த்திமலை கோயில் வளாகம் நீரில் மூழ்கியது திருப்பூர்...

ஆவடி அருகே நாட்டு வெடிகள் வெடித்து 4 பேர் பலி

ஆவடி அருகே நாட்டு வெடிகள் வெடித்து 4 பேர் பலி திருவள்ளூர் மாவட்டம்...