கன்னட நடிகர் கிச்சா சுதீப், விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் நடித்த மேக்ஸ் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னட மூன்று மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கலைப்புலி எஸ். தாணு தயாரித்த அந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்யுக்தா ஹோர்னாட், ஆடுகளம் நரேன், சுனில் உள்ளிட்ட பலரும் நடித்தனர்.
இந்த வெற்றியின் பின்னர், இயக்குனர் விஜய் கார்த்திகேயாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றும் அடுத்த படத்தையும் சுதீப் அறிவித்தார். அதற்கு “மார்க்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில், அஜய் மார்க்கண்டேயா என்ற போலீஸ் அதிகாரியாக சுதீப் நடிக்கிறார். மேக்ஸ் படத்திலும் அவர் காவலராகவே நடித்திருந்ததால், இது அப்பட்டிற்கு தொடராக இருக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இது முற்றிலும் தனித்த கதை என்று படக்குழுவினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்நிலையில், மார்க் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. கிறிஸ்துமஸ் வெளியீடாக ரசிகர்கள் முன் வர திட்டமிடப்பட்டுள்ளது.