ஹவ்ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி டாக்கா நகரில் நடக்கிறது.
மகளிர் காம்பவுண்ட் அணிகள் பிரிவில் ஜோதி சுரேகா, தீப்ஷிகா, பிரித்திகா பிரதீப் ஆகியோருடன் இந்திய அணி இறுதி போட்டியில் 236–234 என்ற கணக்கில் கொரியா அணியை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றது.
காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் அபிஷேக் வர்மா, தீப்ஷிகா ஆகியோர் இடம்பெற்ற இந்திய அணி இறுதி போட்டியில் 153–151 என்ற கணக்கில் வங்கதேச அணியை மீறி தங்கம் வென்றது.
ஆடவருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் அபிஷேக் வர்மா, சாஹில் ராஜேஷ் ஜாதவ், பிரதமேஷ் பால்சந்திரா ஆகியோருடன் இந்திய அணி 229–230 என்ற கணக்கில் கஜகஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.