பஞ்சாப் மாநில தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் சஞ்சீவ் அரோரா, பஞ்சாபில் தொழில் தொடங்க 5 நாட்களில் அனுமதி வழங்கப்படும் எனவும், புதிய தொழில் கொள்கை 2026-ல் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். தமிழக தொழிலதிபர்களை பஞ்சாபில் முதலீடு செய்ய வருமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
சென்னையில் நடைபெற்ற ‘பஞ்சாப் இன்வெஸ்ட்’ முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் கூறியது:
- பஞ்சாப் மாநிலம் தகவல் தொழில்நுட்பம், செமிகண்டக்டர், உற்பத்தி, ஜவுளி, உணவு பதப்படுத்தல் போன்ற எந்தத் துறையிலும் முதலீட்டுக்கு ஏற்றது.
- பசுமை மற்றும் சில ஆரஞ்சு வகை தொழிற்சாலைகளுக்கு அனைத்து அனுமதிகளும் 5 நாட்களில் வழங்கப்படும். தொழில் பூங்காக்களுக்கு வெளியே அமைக்கப்படும் ஆலைகளுக்கு 15 நாட்களில், விரிவாக்கத் திட்டங்களுக்கு 18 நாட்களில் அனுமதி வழங்கப்படும்.
- 2022 முதல் பஞ்சாப் ரூ.1.37 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது; இதனால் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.
மேலும், சென்னையில் பல நிறுவன நிர்வாகிகளுடன் சந்தித்து பஞ்சாபில் நேரடியாக அல்லது மறைமுகமாக முதலீடு செய்ய ஆர்வம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் 2035-ம் ஆண்டு வரையிலான மின்தேவையை இப்போதே திட்டமிட்டு வருகிறது.
அமர் அமைச்சர் கூறியதாவது: “தொழிலதிபர்களின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய தொழில் கொள்கை 2026 ஜனவரிக்குள் வெளியிடப்படும். இது இந்தியாவின் சிறந்த தொழில் கொள்கையாக இருக்கும்.”
நிகழ்ச்சியில் பஞ்சாப் இன்வெஸ்ட் தலைமை செயல் அதிகாரி அமித் தாக்கா, இணை தலைமை செயல் அதிகாரி ஜஸ்ப்ரீத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.