மத்திய அமைச்சரவை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஏற்றுமதியாளர்களின் போட்டித் தன்மையை மேம்படுத்த ரூ.45,000 கோடி மதிப்பிலான இரண்டு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- ரூ.25,060 கோடி மதிப்பிலான ஏற்றுமதி வளர்ச்சி திட்டம் 2025–26 முதல் 2030–31 வரை செயல்பட்டு, இந்தியாவின் சர்வதேச வர்த்தக போட்டித் தன்மையை உயர்த்தும்.
- ரூ.20,000 கோடி மதிப்பிலான கடன் உத்தரவாத திட்டம் (CGSE), குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புதிய ஏற்றுமதியாளர்களுக்கு 100% ஈட்டுப்பிணையம் இல்லாமல் கடன் வழங்கும்.
பிரதமர் மோடி தனது பதிவில் கூறியதாவது: “இந்திய தயாரிப்புகள் உலக சந்தையில் அதிக எதிரொலியை பெற ஏற்றுமதி வளர்ச்சி திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய கடன் உத்தரவாத திட்டம், ‘சுய சார்பு இந்தியா’ கனவை நனவாக்க ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்கம் வழங்கும்.”
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்: “இந்திய தயாரிப்புகளை உலக சந்தையில் பரப்பி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிப்பது பிரதமரின் நோக்கம். இதற்காக புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.”