சென்னையை தலைமையகமாகக் கொண்ட டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகன நிறுவனம் புதிய நிர்வாக இயக்குநர் (எம்.டி.) மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) டார்ஸ்டன் ஸ்மித் (வயது 53) நியமிக்கப்பட்டார்.
தற்போது தலைமை நிதி அதிகாரியாக உள்ள டார்ஸ்டன், 2026-ல் புதிய பொறுப்பை ஏற்க உள்ளார். உலகின் மிகப்பெரிய வர்த்தக வாகன நிறுவனங்களில் ஒன்றான டெய்ம்லரில் சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் உள்ளனர். டார்ஸ்டன் ஸ்மித் கடந்த 1997-ம் ஆண்டு டெய்ம்லர் டிரக் நிறுவனத்தில் சேர்ந்தவர் மற்றும் கடந்த 28 ஆண்டுகளில் பல பதவிகளை வகித்துள்ளார்.