ஃபிடே உலகக் கோப்பை செஸ்: டைபிரேக்கரில் தோல்வி – பிரக்ஞானந்தா வெளியேற்றம்

Date:

கோவாவில் நடைபெற்று வரும் ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில், இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா 4-வது சுற்றின் டைபிரேக்கரில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். ரஷ்ய வீரர் டேனியல் துபோவுக்கு எதிராக 1.5–2.5 என்ற கணக்கில் பிரக்ஞானந்தா தோல்வி பெற்றார். 2023-ல் இறுதி வரை சென்ற பிரக்ஞானந்தாவின் இம்முறை விரைவான வெளியேற்றம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இதேவேளையில், மற்ற இந்திய வீரர்கள் அர்ஜுன் எரிகைசி மற்றும் பி. ஹரிகிருஷ்ணா டைபிரேக்கரில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.

  • அர்ஜுன் எரிகைசி – 3–1 (ஹங்கேரி: பீட்டர் லெகோ)
  • ஹரிகிருஷ்ணா – 2.5–1.5 (சுவீடன்: நில்ஸ் கிராண்டேலியஸ்)

அதே தொடரில் இந்திய வீரர்களான வி. பிரணவ் (உஸ்பெகிஸ்தான்: நோடிர்பெக் யாகுபோவ்) மற்றும் வி. கார்த்திக் (வியட்நாம்: லெ குவாங் லீம்) டைபிரேக்கரில் தோல்வியடைந்து வெளியேற்றப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு – ட்ரோன்களுக்குத் தடை!

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு -...

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில் வெடித்தது முழு அளவிலான போர்!

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில்...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் நாட்டின் ராணுவ பலம் குறித்த விரிவான தகவல்கள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில்,...

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் – மர்ம நபர்களின் அட்டூழியம்!

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் - மர்ம நபர்களின்...