பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தில் நடிகர்–நடனக் கலைஞர் பிரபுதேவா முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்றிருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.
இப்படத்தில் தனுஷ் சங்கர் என்ற கேரக்டரிலும், கீர்த்தி சனோன் முக்தி எனும் பாத்திரத்திலும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசை வழங்கியுள்ள இந்த படம் இந்தி மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாகி, நவம்பர் 28 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
வாரணாசி பின்னணியில் நடைபெறும் காதல் கதையை மையமாகக் கொண்ட இப்படத்தில் பிரபுதேவாவின் இணைவு மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.