இந்திய சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவுக்கு 40% அதிகரிப்பு – மாஸ்கோவில் இந்தியா இரண்டாவது இடத்தில்
2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ரஷ்யாவுக்குச் சென்ற இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
மாஸ்கோ நகர சுற்றுலா குழுவின் தகவலின்படி, 2025 ஜனவரி முதல் ஜூன் வரை 40,800 இந்தியர்கள் மாஸ்கோவைப் பார்வையிட்டுள்ளனர். இது கடந்த ஆண்டின் அதே காலகட்டத்தை விட 40% அதிகம் ஆகும்.
சிஐஎஸ் (Commonwealth of Independent States) அமைப்பில் சேராத நாடுகளின் பயணிகள் வருகையில், இந்தியா தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதே நேரத்தில், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் மொத்தம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாஸ்கோவை வந்தடைந்துள்ளனர். இது 2024ம் ஆண்டை விட சுமார் 10% அதிகம்.
மாஸ்கோ நகர சுற்றுலா அதிகாரிகள் தெரிவித்ததாவது:
“ஆசிய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இ-விசா வசதி, பல்வேறு கலாச்சார விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மாஸ்கோவை உலகளவில் பிரபலமான சுற்றுலா இலக்காக மாற்றியுள்ளன,” என கூறினர்.