விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ரஞ்சி ட்ரோபி கிரிக்கெட் போட்டியில், தமிழக அணி இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான முன்னிலை பெற்றுள்ளது.
முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 182 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் வித்யுத் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார். ஆந்திராவுக்காக பிருத்விராஜ் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து ஆந்திர அணி 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷேக் ரஷீத் 87 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடினார். தமிழக பந்துவீச்சாளர்களில் சந்தீப் வாரியர் 4 விக்கெட், திரிலோக் நாக், சோனு யாதவ், சாய் கிஷோர் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர்.
5 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழக அணி, 3 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது. சச்சின் பாலசுப்பிரமணியம் 51 ரன்கள், பிரதோஷ் ரஞ்சன் பால் 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
இதனால் தமிழக அணி மொத்தம் 107 ரன்கள் முன்னிலை பெற்று, இன்று 3-வது நாள் ஆட்டத்தைத் தொடங்குகிறது.