டெல்லி வெடிப்புச் சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது — காங்கிரஸ் கண்டனம்

Date:

டெல்லி வெடிப்புச் சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது — காங்கிரஸ் கண்டனம்

டெல்லியில் செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயிலில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று வெடித்ததில், 8 பேர் உயிரிழந்து, 24 பேர் காயமடைந்தனர். இந்த துயரச் சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செய்திப் பிரிவு தலைவர் பவன் கெரா தனது அறிக்கையில் கூறியதாவது:

“டெல்லி வெடிப்புச் சம்பவம் மிகவும் வேதனை அளிப்பதாகும். இந்த துயரமான நேரத்தில் நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். இந்தச் சம்பவம் குறித்து அரசு விரைந்து மற்றும் ஆழமாக விசாரணை நடத்த வேண்டும்.”

இந்த வெடிப்புக்குப் பின் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லி செங்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், அந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

உலகக் கோப்பை செஸ்: நான்காம் சுற்றுக்கு முன்னேறிய கார்த்திக் வெங்கட்ராமன்

உலகக் கோப்பை செஸ்: நான்காம் சுற்றுக்கு முன்னேறிய கார்த்திக் வெங்கட்ராமன் கோவாவில் நடைபெற்று...

“50 தொகுதிகள் லட்சியம், 40 நிச்சயம்” — அதிமுகவை அழுத்தும் பாஜக?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள்...

காரில் வரும் மந்திரவாதி நண்பன்” — என் டப்பிங் அனுபவங்களும் பள்ளி நாட்களும்

எனக்கு டப்பிங்கில் சிறிது சிறிது ஆர்வம் இருந்தது. ஆரூர்தாஸ் ஐயா மற்றவர்களுக்கு...

“வாகனங்களை அலங்கரிக்கக் கூடாது” — சபரிமலை மண்டலக் காலத்துக்கு பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

சபரிமலையில் மண்டல கால வழிபாடுகள் தொடங்கவிருக்கையால் ஐயப்ப பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள்...