2-வது டெஸ்டில் துருவ் ஜூரெல் மீண்டும் சதம்: தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு 417 ரன்கள் இலக்கு

Date:

2-வது டெஸ்டில் துருவ் ஜூரெல் மீண்டும் சதம்: தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு 417 ரன்கள் இலக்கு

இந்தியா ‘ஏ’ மற்றும் தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் பெங்களூருவில் பிசிசிஐ சிறப்பு மையத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்தியா ‘ஏ’ அணி 255 ரன்கள், தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 221 ரன்கள் எடுத்தனர்.

34 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா ‘ஏ’ அணி, 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 24 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்தது. இதில் அபிமன்யு ஈஸ்வரன் 0, தேவ்தத் படிக்கல் 24, சாய் சுதர்சன் 23 ரன்களில் ஆட்டமிழந்தனர். கே.எல்.ராகுல் 26 ரன்கள் மற்றும் குல்தீப் யாதவ் ரன் எடாமல் உள்ளனர்.

நேற்று, 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்தியா ‘ஏ’ அணி 89.2 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 382 ரன்கள் எடுத்துக்கொண்டு டிக்ளேர் செய்தது. கே.எல்.ராகுல் 27, குல்தீப் யாதவ் 16 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரிஷப் பந்த் 54 பந்துகளில் 65 ரன்கள் (4 சிக்ஸர், 5 பவுண்டர்), ஹர்ஷ் துபே 116 பந்துகளில் 84 ரன்கள் (12 பவுண்டர், 1 சிக்ஸர்) விளாசி அசத்தினர்.

முதல் இன்னிங்ஸில் சதம் செய்த துருவ் ஜூரெல் இந்தமுறை 170 பந்துகளில் 127 ரன்கள் (1 சிக்ஸர், 15 பவுண்டர்) ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி சார்பில் ஒகுஹ்லே செலே 3 விக்கெட்கள் கைப்பற்றினார்.

இதன் மூலம், தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 417 ரன்கள் இலக்குடன் பேட் செய்ய தொடங்கியது. 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்துள்ளனர். ஜோர்டான் ஹெர்மான் 15, லெசெகோ செனோக்வானே 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கின்றனர். வெற்றிக்காக 392 ரன்கள் தேவை, 10 விக்கெட்கள் முழுமையாக உள்ள நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டத்தை சந்திக்கிறது தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கொங்கு, சோழ மண்டலம் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் என்டிஏ வெற்றி – நயினார் நாகேந்திரன்

கொங்கு, சோழ மண்டலம் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் என்டிஏ வெற்றி –...

100 நாள் வேலைத் திட்டத்தில் பிற மாநிலங்களை விட தமிழகத்திற்கு அதிக ஒதுக்கீடு

100 நாள் வேலைத் திட்டத்தில் பிற மாநிலங்களை விட தமிழகத்திற்கு அதிக...

இந்தியாவின் உள்நாட்டு விஷயங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு அதிகாரமில்லை

இந்தியாவின் உள்நாட்டு விஷயங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு அதிகாரமில்லை இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற சில...

போர் நிறுத்த ஒப்பந்தம்: 90% ஒத்த கருத்து ஏற்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி அறிவிப்பு

போர் நிறுத்த ஒப்பந்தம்: 90% ஒத்த கருத்து ஏற்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி அறிவிப்பு அமெரிக்கா...