‘கருப்பு’ அப்டேட்: இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவக்கம்
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் இறுதி படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்ற குழப்பம் நீடித்த நிலையில், தற்போது 16 நாட்கள் கொண்ட கடைசி அட்டவணை தொடங்கியுள்ளது. இதில் சூர்யா பங்கேற்காமல், மற்ற நடிகர்களின் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்த படத்தில் த்ரிஷா, நட்டி நட்டராஜன் சுப்பிரமணியன், ஆர்.ஜே. பாலாஜி, ஸ்வாசிகா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இப்படம் ஜனவரி 23 அன்று வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன, ஆனால் இதுகுறித்து தயாரிப்பு குழு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.
‘கருப்பு’ படப்பணிகளை முடித்த பின், சூர்யா தற்போது வெங்கி அட்லுரி இயக்கும் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதை முடித்ததும், அவர் ஜீத்து மாதவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.