பிஹாரில் சாலையோரம் கிடந்த விவிபாட் சீட்டுகள் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்
பிஹாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் சாலையோரம் விவிபாட் ஒப்புகைச்சீட்டுகள் சிதறிக் கிடந்தது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சம்பவ இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று விசாரிக்க உத்தரவிட்டார்.
விசாரணையில், அவை உண்மையான வாக்குப்பதிவு சீட்டுகள் அல்ல, மாதிரி வாக்குப் பதிவு பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட விவிபாட் சீட்டுகள் என்பதும், தேர்தல் நடைமுறையில் எந்த வித குற்றமும் நடைபெறவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.
ஆனால், அலட்சியமாக செயல்பட்ட உதவி தேர்தல் அதிகாரி (A.R.O.) இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்; மேலும், இதுகுறித்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.