ஐசிசியின் சிறந்த அணியில் மூன்று இந்திய வீராங்கனைகள் இடம்
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.
இறுதிப் போட்டியில் இந்தியா தென் ஆப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது.
இந்நிலையில், இந்த தொடருக்கான சிறந்த 11 வீராங்கனைகள் கொண்ட அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அறிவித்துள்ளது. இதில் இந்திய அணியைச் சேர்ந்த ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா ஆகிய மூவர் இடம் பெற்றுள்ளனர்.
தொடக்க வீராங்கனையான மந்தனா, 54.25 சராசரியுடன் 434 ரன்கள் (1 சதம், 2 அரைசதம்) குவித்தார்.
ஜெமிமா ரோட்ரிக்ஸ், 58.40 சராசரியுடன் 292 ரன்கள் எடுத்தார்; அதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 127 ரன்கள் அடித்து மிரட்டினார்.
தீப்தி சர்மா பேட்டிங்கில் 215 ரன்களும், பந்துவீச்சில் 22 விக்கெட்களும் பெற்று, இறுதியில் 5 விக்கெட்கள் வீழ்த்தியதற்காக தொடர் நாயகி விருதையும் பெற்றார்.
தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து மூவர் தேர்வாகியுள்ளனர். அதில் லாரா வோல்வார்ட் 571 ரன்களுடன் சிறந்த கேப்டனாக தேர்வாகியுள்ளார்.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை – சிறந்த அணி:
ஸ்மிருதி மந்தனா (இந்தியா), லாரா வோல்வார்ட் (தென்னாப்பிரிக்கா, கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (இந்தியா), மரிசான் காப் (தென்னாப்பிரிக்கா), ஆஷ் கார்ட்னர் (ஆஸ்திரேலியா), தீப்தி சர்மா (இந்தியா), அன்னாபெல் சதர்லேண்ட் (ஆஸ்திரேலியா), நாடின் டி கிளார்க் (தென்னாப்பிரிக்கா), சித்ரா நவாஸ் (பாகிஸ்தான்), அலானா கிங் (ஆஸ்திரேலியா), சோஃபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து), நாட் ஸ்கைவர்-பிரண்ட் (இங்கிலாந்து).