சத்தீஸ்கர் ரயில் விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 11–ஆக உயர்வு
சத்தீஸ்கரில் பிலாஸ்பூர் ரயில் நிலையம் அருகே நின்றிருந்த சரக்கு ரயிலில், பயணிகள் ரயில் மோதி ஏற்பட்ட பேரவிபத்தில் பலி எண்ணிக்கை 11–ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (நவம்பர் 4) மாலை சுமார் 4 மணியளவில், கோர்பாவின் கெவ்ரா பகுதியிலிருந்து பிலாஸ்பூர் நோக்கி சென்ற மெமு ரயில், அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலை மிக வேகமாக மோதியது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 என ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
விபத்து நடந்ததும் உடனடியாக மீட்பு மற்றும் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. காயமடைந்தவர்கள் பிலாஸ்பூர் அப்பல்லோ மருத்துவமனை மற்றும் சத்தீஸ்கர் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மோதிய தாக்கத்தில் பயணிகள் ரயிலின் ஒரு பெட்டி, சரக்கு ரயிலின் பெட்டியின் மீது ஏறி நொறுங்கியது. “சிவப்பு சிக்னலை மீறி சுமார் 60–70 கிமீ வேகத்தில் பயணிகள் ரயில் மோதியுள்ளது. லோகோ பைலட் ஏன் அவசர பிரேக் போடவில்லை என விசாரணை நடைபெற்று வருகிறது” என ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.
இந்த விபத்தில் பயணிகள் ரயில் லோகோ பைலட் வித்யா சாகர் உயிரிழந்தார். உதவி லோகோ பைலட் ரஷ்மி ராஜ் கடுமையாக காயமடைந்தார். உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெறும்.
சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், இறந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.