போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ரிசப் பைசோவுக்கு இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு
டெல்லி போலீஸார் ரூ.13,000 கோடி மதிப்புள்ள கொக்கெயின் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக தேடப்படும் ரிசப் பைசோவுக்கு இன்டர்போல் ரெட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
டெல்லி, பஞ்சாப், மும்பை, ஹைதராபாத் மற்றும் கோவா பகுதிகளில் பெருமளவில் போதைப்பொருள் கடத்தலும் விற்பனையும் நடைபெறிவருகிறது. கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற வாகன சோதனையில் ஒரு கிலோ கொக்கெயின் மற்றும் மெபட்ரோன் கைப்பற்றப்பட்டது. அப்போது கைது செய்யப்பட்ட ஜத்திந்தர் சிங் கில், ரிசப்புடன் டெல்லி ஹட்கோ பேலஸ் ஹோட்டலில் தங்கியிருந்தது சிசிடிவி காட்சியில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் கைது நடவடிக்கையிலிருந்து ரிசப் தப்பிச் சென்றார்.
அவர் தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் ஒளிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தென் அமெரிக்காவில் இருந்து துபாய் வழியாக இந்தியாவுக்கு போதைப்பொருள் கடத்தியதாகவும் தகவல். இதையடுத்து அவரை கைது செய்ய இந்தியா இன்டர்போல் உதவி கேட்டது. தற்போது வெளியிடப்பட்ட சிவப்பு அறிவிப்பின் அடிப்படையில் அவர் எங்கு கண்டுபிடிக்கப்பட்டாலும் கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.