“ஆர்ஜேடி போஸ்டர்களில் லாலு படம் எங்கே?” — பிரதமர் மோடி தேஜஸ்விக்கு நேரடி சுட்டுரை
பிஹாரில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்ஜேடி சுவரொட்டிகளில் லாலு பிரசாத் யாதவின் படமே இல்லை என்பதை சுட்டிக்காட்டி, பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக தேஜஸ்வி யாதவிடம் கேள்வி எழுப்பினார்.
கதிஹாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கூறியது:
பிஹாரில் ஒட்டப்பட்டுள்ள ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் சுவரொட்டிகளில், மாநிலத்தில் “கட்டாட்சியை கொண்டு வந்தவர்” என விமர்சிக்கப்படும் லாலு பிரசாத் யாதவின் படம் எங்கும் இல்லை. சில இடங்களில் இருந்தாலும் கூட, மிகச் சிறியதாக இருப்பதால் தெளிவாகக் கூட காண முடியவில்லை.
ஆர்ஜேடி குடும்பமே முழுவதும் அரசியலில் இருந்தும், ஏன் கட்சியின் மிகப்பெரிய தலைவரின் படத்தை பயன்படுத்தவில்லை? தேஜஸ்வி யாதவ் ஏன் தனது தந்தையின் பெயரைச் சொல்லுவதில் தயக்கம் காட்டுகிறார்? தந்தையின் பெயரைச் சொல்வதில் என்ன வெட்கம்?
பிஹார் இளைஞர்களிடமிருந்து எதை மறைக்க முயல்கிறார்கள்? ஆர்ஜேடி என்ன தவறு செய்துள்ளது?
அதை எதிர்க்கட்சித் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி விளக்க வேண்டும் என பிரதமர் மோடி சவால்விட்டார்.