3 ஆண்டுகளில் 1.5 லட்சம் உயிரிழப்பு: சூடானை நசுக்கும் உள்நாட்டுப் போர்
விவசாயம், எண்ணெய், தங்கம் போன்ற வளங்கள் நிறைந்த ஆப்பிரிக்க நாடான சூடான், கடந்த 3 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரினால் உலகின் மிக கொடூரமான மனிதாபிமான நெருக்கடி மண்டலமாக மாறியுள்ளது. அதிகாரப் போர் 1.5 லட்சம் உயிர்களை காவு வாங்கி, சுமார் 1.2 கோடி பேரை தங்கள் வீடுகளை விட்டு அகதிகளாக மாற்றியுள்ளது.
போரின் வேர்கள்
- 1956–ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற சூடானில், நிலையான ஜனநாயக ஆட்சி உருவாகவில்லை.
 - ராணுவம், துணை ராணுவ அமைப்புகள், பிராந்திய கிளர்ச்சிக் குழுக்கள் ஆகியவை அதிகாரத்திற்காக போராடும் நிலை நீடித்து வருகிறது.
 - 2021–ல் ராணுவப் புரட்சி; ராணுவ ஆட்சி அமலானது.
 
ரத்தப்போரை எரிய வைத்த காரணம்
ராணுவத்துக்கும் துணை ராணுவ அமைப்பான Rapid Support Forces (RSF)-க்கும் இடையில் அதிகார போர் வெடித்தது.
RSF–ன் வேர்கள் 2000களில் தார்ஃபூரில் இனப்படுகொலைக்கு பெயர்பெற்ற ஜன்ஜாவீட் மில்லிடியாவில் உள்ளது.
2023ம் ஆண்டு RSF சூடான் தலைநகர விமான நிலையத்தை கைப்பற்றியது, அதன் பின்னர் உள்நாட்டுப் போர் தீவிரமானது.
சூடானின் எண்ணெய் மற்றும் தங்க வளங்களை கைப்பற்ற வெளிநாட்டுகளின் ஆதரவும் RSF–க்கு இருப்பதாக குற்றச்சாட்டு; குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ராணுவம் விரல் சுட்டுகிறது — ஆனால் UAE மறுப்பில் உள்ளது.
எல் ஃபாசரில் இனப்படுகொலை
சமீபத்தில் தார்ஃபூர் பிரதேச தலைநகரமான எல் ஃபாசர் RSF–க்குக் கிடைத்தது. இராணுவம் பின்வாங்கியதும், அரபு இனத்தைச் சேர்ந்தவரல்லாத
- ஃபர்
 - ஜகாவா
 - பெர்ட்டி
இன மக்கள் வீடு வீடாக தேடப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சிலரிடம் மிரட்டல் மூலம் பணமும் பறிக்கப்பட்டது.
சாட்டலைட் படங்களில் உடல்கள் சாலைகளில் கிடப்பது, இரத்த ஓடைகள் என கொடூரம் பதிவாகியுள்ளது.
 
பெண், குழந்தைகள் மீது கொடுமைகள்
சமூக வலைதளங்களில் #AllEyesOnSudan எனும் ஹேஷ்டேக் உலக கவனத்தை ஈர்க்கிறது.
பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை பெருமளவில் நடைபெறுவதாக தகவல்கள் வருகின்றன.
மனிதாபிமான நெருக்கடி
- 2.4 கோடி மக்கள் பசியால் தவிக்கின்றனர்
 - பல பகுதிகளில் பஞ்சம்
 - அகதி முகாம்களில் காலரா உள்ளிட்ட தொற்று நோய்கள்
 - வடக்கிலும் கிழக்கிலும் மட்டுமே அரசு ராணுவ கட்டுப்பாடு உள்ளது; பிற பகுதிகள் RSF ஆட்சியில்
 
சூடான் இன்று ரத்தமும் பசியும் நிறைந்த போர்வெலமாக மாறியுள்ளது; உலக சமூகம் தலையிட வேண்டிய அவசியம் நாளுக்கு நாள் தீவிரமடைகிறது.